• Dec 25 2024

மத கஜ ராஜா' ரிலீசாக வாய்ப்பிருக்கா! தயாரிப்பாளர் அட்ரஸ் தர்றேன் போய் நேரில் கேளுங்க! இயக்குநர் சுந்தர் c காட்டம்!

subiththira / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் சுந்தர் c இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி பத்து ஆண்டுகள் கிடப்பில் கிடக்கும் 'மத கத ராஜா' படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து சுந்தர் சி பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக, இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி. கோலிவுட்டில் தொடர்ச்சியாக கமர்ஷியல் படங்களை இயக்குவதிலும் பெயர் போன இவர் தற்போது 'அரண்மனை' படத்தின் நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். இப்பத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பத்திரிக்கையாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் சுந்தர் சி.


அப்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி நீண்ட காலமாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கும் 'மத கத ராஜா' படம் ரிலீஸ் ஆகுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், 'மத கத ராஜா' படம் இப்போது வந்தாலும் நல்ல பொதுபோக்கு படமாக ரசிகர்களை என்டர்டெயின்ட் செய்யும். அந்தப்படத்தின் மீது எந்த கடனும் இல்லை. தயாரிப்பாளருடைய முந்தைய படத்தின் கடனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


நானும், விஷாலும் நாங்களே படத்தை வாங்கி கொள்கிறோம் என கெஞ்சி கூட பார்த்தோம். ஆனால் அவர் தரவில்லை. தயாரிப்பாளருடைய அட்ரஸ் தர்றேன். நீங்களே போய் நேரில் கேளுங்க. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement