• Dec 26 2024

10 வருசமா விஜய் டிவியில் பணிபுரியும் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகள் தானா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரபலமான ஒரு தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ரீல்- ரியல் சின்னத்திரை ஜோடிகள் கொண்டு நடத்தப்படும் ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, பிக் பாஸ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஹிட்டான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மாகாபா ஆனந்த். இவர் ரேடியோ ஜாக்கியில் பணிபுரியும் போதும் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு இருந்து வந்தனர். இதனைத் தொடர்ந்தே விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.


அந்தவகையில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது எது இது’ ஷோ  தான் இவர் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. இதனையடுத்து சூப்பர் சிங்கர், அண்டாகாகசம், ஊ சொல்லுறியா ஊஊ சொல்லுறியா போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகின்றார்.

அதிலும் குறிப்பாக இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ப்ரியங்காவுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. மேலும் இவர் தொகுப்பாளராக பிரபலமானாலும் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார்.


10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணிபுரியும் இவர், விரைவில்  ‘அது எது இது’ நிகழ்ச்சியின் மூன்றாவது ஷோவையும் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிலையில், விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கிட்டத்தட்ட மாகாபாவின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement