• Apr 24 2026

இல்லம் தேடி வந்த மகாலட்சுமி! அட்லீ வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியில் குடும்பம்

shali / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. “ராஜா ராணி”, “தெறி” போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து பல ஹிட் படங்களை வழங்கி பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். வணிக ரீதியாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் ரசிகர்களை கவரும் திறமை அவரை முன்னணி இயக்குநராக உயர்த்தியது.


இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் ரசிகர்களிடையே எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம், தனது மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக அட்லீ அறிவித்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, பிரமாண்டமாக வளைகாப்பு விழாவையும் நடத்தி, அந்த மகிழ்ச்சியை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில், அட்லீ – ப்ரியா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே “மீர்” என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது குடும்பம் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளது.

2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, தொழிலிலும், குடும்பத்திலும் சமநிலையை பேணி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது குழந்தையின் வருகையால், அவர்களின் வாழ்க்கையில் புதிய சந்தோஷ அத்தியாயம் தொடங்கியுள்ளது.


Advertisement

Advertisement