• Apr 24 2026

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம்.? நீதிபதி அதிரடி உத்தரவு

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

இந்த வழக்கில் இருதரப்பும் சமரசமாக முடிவுக்கு வர முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருதரப்பு வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

அந்த பேச்சுவார்த்தையில், சங்கீதா தரப்பில் தமக்கும் குழந்தைகளுக்கும் சேர்த்து 250 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கோரப்பட்டதாகவும், விஜய் தரப்பில் 30 கோடி ரூபாய் அளிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..

மேலும், குழந்தைகளின் பராமரிப்பை தாமே மேற்கொள்வதாக விஜய் தரப்பில் கூறப்பட்டதாகவும், சங்கீதா தரப்பு அதனை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், விஜய் – சங்கீதா விவாகரத்து தொடர்பில்  இன்று நடைபெற்ற விசாரணையில், ஜூன் 15ஆம் தேதி வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். 

மேலும் அன்று நடைபெறும் அடுத்த விசாரணைக்கு விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கியுள்ள சூழலில், இன்று விசாரணையில் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் இருந்த ரசிகர்கள், வழக்கு ஒத்திவைக்கப்பட்டதால் நிம்மதியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement