• Dec 26 2024

நாளையுடன் முடிகிறது ‘மகாராஜா’ ஆட்டம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் நாளை மறுநாள் ’இந்தியன் 2’ படம் வெளியாவதால் நாளையுடன் அனைத்து திரையரங்கில் இருந்தும் தூக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே 100 கோடி வசூல் செய்து விட்டதாக தயாரித்து தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் மொத்தமாக இந்த படம் 105 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறியபோது ’வணிக ரீதியாக எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பதை தாண்டி ஒரு எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்த படம் என்றும் நல்ல படத்தை வரவேற்க தமிழ் திரை உலகினர், தமிழ் திரை ரசிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ‘மகாராஜா’ வெற்றி கொடுத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

‘மகாராஜா’ திரைப்படத்தின் கதையை கேட்டதும் கண்டிப்பாக இது பார்வையாளர்களை கவரும் என்று நம்பினேன் என்றும் ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தியது வணிகரீதியாக இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த பல திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாத நிலையில் தற்போது அவரது படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி நூறு கோடி வசூல் என்ற மைல்கல்லையும் தொட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement