• Dec 27 2024

ஜிவி பிரகாஷ் பெயரை நீக்கிய சைந்தவி.. இப்போது புதிய பெயர் என்ன தெரியுமா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்த நிலையில் தற்போது சைந்தவி எடுத்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தான் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பிரிகிறோம் என்று அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் பிரிவுக்குப் பின்னரும் சைந்தவி தனது சமூக வலைதளத்தில் சைந்தவி பிரகாஷ் என்ற பெயரில் தொடர்ந்த நிலையில் தற்போது பிரகாஷ் என்ற பெயரை நீக்கி சிங்கர் சைந்தவி என்று பெயரை மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவர் தனது கணவரை நிரந்தரமாக பிரிய முடிவு எடுத்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உடனடியாக பெயரை மாற்ற முடியாது என்றும் அதற்கான சில நிபந்தனைகள் இருப்பதால் காலதாமதம் ஆனதாகவும் தற்போது அவர் தனது அனைத்து சமூக வலைதளங்களிலும் சிங்கர் சைந்தவி என்று மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement