• Dec 26 2024

கண்ணாடி முன்னாடி.. கையில் ஒரு கிளாஸ்.. மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் கண்ணாடி முன் நின்று கையில் ஒரு கிளாஸ் உடன் கொடுத்திருக்கும் போட்டோஷூட் போஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின்னர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ தனுஷ் நடித்த ’மாறன்’ ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார் என்பதும் அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் ஆங்கில தொலைக்காட்சி சீரியலிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோக மியூசிக் வீடியோ, மாடலிங் உட்பட பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மாளவிகா மோகனன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் கண்ணாடி முன் எடுத்த செல்பி புகைப்படம் உட்பட பல்வேறு கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் கையில் கிளாஸ் உடன் இருக்கும் ஒரு புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


Advertisement

Advertisement