தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடியனாக இருந்து தற்போது கதா நாயகனாக கலக்கி வருபவர் தான் நடிகர் சூரி.. இவர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் பாகத்தில் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய நடிப்பு மக்களை பெரிதும் கவர்ந்தது.
இதை தொடர்ந்து சசிக்குமாருடன் கருடன், கொட்டுக்காளி, விடுதலை படத்தின் பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கிடையில் விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். குடும்ப உறவுகள் தொடர்பான உணர்வுகளை மையக்கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த படத்திற்கு மாமன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் மாமன் என்ற பெயருக்கு அர்த்தம் சொல்லும் வகையிலேயே அவருடைய மடியில் ஆண் குழந்தை ஒன்று இருக்க, சூரி கதற கதற காது குத்திக் கொள்ளுகின்றார். தற்போது இந்த போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Listen News!