பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ற்கான கிராண்ட் பைனல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் யார் இந்த சீசனுக்கான டைட்டிலை வெற்றி பெறப் போகின்றார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 108 வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒரு வாழைப்பழத்திற்காக கலாட்டா போடுகின்றார்கள். இதை வைத்து பிக் பாஸ் பார்வையாளர்கள் கலாய்த்து வருகின்றார்கள்.
அதாவது குறித்த பிரமோவில், கிச்சனிலிருந்த பவித்ராவிடம் எதற்காக என் மீது வாழைப்பழத்தை தூக்கி போட்டா? என்று ஆனந்தி கேட்கின்றார். அதற்கு பவித்ரா நான் தூக்கி போடவில்லை அங்கு ஸ்டோர் ரூமில் வைத்திருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்.
அதில் தனக்கு எட்டு வாழைப்பழம் வேணுமென முத்து சொல்ல, அவனுக்கு 8 பழம் போனா மீதி காணாதுடி என்று ஆனந்தி சொல்லுகிறார். அதற்கு பவித்ரா பழம் கெட்டு போறதுக்கு யாருக்கும் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார்.
இதனால் இது என்ன வெளிநாட்டு வாழைப்பழமா? என முத்து கேட்க, ஒரு வாழைப்பழத்துக்கு இவ்வளவு அக்கப்போரா என பவித்ரா முணுமுணுக்கிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!