அண்மைக்காலமாக படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்கியும் வருகின்றார்.அந்தவகையில் தற்போது இவர் இயக்கி நடித்துள்ள neek மற்றும் இட்லி கடை திரைப்படங்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் படப்புடிப்பு வேலைகள் முடிவடைந்து பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வெளியிட தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பெப்ரவரி 6 ஆம் திகதி வெளியாக இருப்பதனால் பட வெளியீட்டு தேதி குறித்து தீர்மானம் எடுப்பதில் மிகவும் குழப்பத்தில் இருந்த படக்குழு தற்போது அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பவிஷ்,அனிகா சுரேந்திரன்,பிரியா பிரகாஷ் வாரியர்,மேத்யூ தாமஸ்,வெங்கடேஷ் மேனன்,ரபியா கட்டூன்,ரம்யா ரங்கநாதன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள இப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைப்பில் கஸ்தூரி ராஜா தயாரித்துள்ளார்.மற்றும் இப் படத்தினை பெப்ரவரி 21 ஆம் திகதி வெளியிட உள்ளதாக போஸ்ட்டர் ஒன்றினை தனுஷ் தனது x தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Listen News!