• Dec 25 2024

Mani-க்கு வெளிய காதலி இருக்கு.. என்னைய நல்லா பயன்படுத்திட்டாரு..! உண்மையை உடைத்த ரவீனா!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் 7 அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் வெற்றியாளர் யார் என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் வரலாற்றிலையே டைட்டில் வின்னர் யார் என்று கொஞ்சம் கூட  ரசிகர்களால் கண்டு பிடிக்க முடியாத ஒரு சீசன் என்றால் அது சீசன் 7 மட்டுமே. அந்த அளவுக்கு பட்டைய கிளப்பிய சீசன் என்று சொல்லலாம் . 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ்  வீட்டுக்குள் வருவது வழக்கம். அதே போல, இந்த தடவையும் பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்து இருந்தனர்.

அதில் ஒருவராக வந்தவர் தான் ரவீனா. தன்னுடைய சிரிப்பின் மூலமே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரவீனா என்று பிரபலமானதை  விட மணி ரவீனா என்று தான் பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமானார் . 


எனினும், பிக் பாஸ் வீட்டில் இவர்கள் நண்பர்களா? காதலர்களா? என்று பிக் பாஸ் கூட குழம்பும்  அளவிற்கு இவர்களின் உறவு தொடர்ந்தது.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த ரவீனா,  மணியோட முகத்தை பார்த்து ஒழுங்காக கதைக்கவில்லை. மணியோட சிரிச்சி நல்ல காமெடியா கதைக்கிற ரவீனா, முதல் மாதிரி இல்லாமல் ரொம்பவும் சாதுவா காணப்பட்டாங்க. இதற்கு காரணம் என்ன என்று ரசிகர்களும் குழம்பி இருந்தனர்.

இந்த நிலையில், மணிக்கு வெளியில் காதலி இருப்பதாக நிக்சனிடம் உண்மையை உடைத்துள்ளார் ரவீனா. மேலும், இதை கேட்க தான் வந்தன், ஆனா இங்க வச்சு கேக்க முடியாது, வெளியில மணி வரட்டும் அப்போ கட்டாயம் கேட்பேன் என சொல்லியுள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், மணி எப்போ வெளிய வருவார் என்று தான் பார்த்திட்டு இருக்கன் . வெளிய அவருக்கு இன்னொரு காதலி இருக்கு என்று  எனக்கு தெரிய வந்துருச்சி . மணியும் அந்த பொண்ண காதலிக்கிறார் என்று தான் எனக்கும் தகவல் வந்தது. ஆனாலும் அதுக்குரிய எந்த ஆதாரமும் என்னட்ட இப்போ இல்லை . அவரிடம் தான் எல்லாம் கேட்கனும் . 

அதேவேளை, பிக் பாஸ் வீட்டில் நிக்சனுடன் ரவீனா பேசினாலே மணிக்கு பிடிக்காது . ஏன் நீ நிக்சன் கூட கதைக்கிறா? என்று மணி ரவீனாக்கு பேசுவார். 

எனினும், இத்தனை கேமராக்கு முன்னால், எத்தனையோ கோடி மக்கள் பார்த்திட்டு இருப்பாங்க என்று தெரிந்தும் ரவீனா இப்பிடி செய்தது குற்றம் என்று நிறைய பெயர் ரவீனா மீது குற்றம் சொல்லி இருக்காங்க . 


அதுமட்டுமின்றி, பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த ரவீனா, நான் வந்து பிக் பாஸ் ஷோ பார்த்தன். நான் தான் மணிக்காக விளையாடி இருக்கன். மணி என்னைய பயன்படுத்தி இருக்காரு . இதெல்லாம் பார்க்கும் போது எனக்கே விசரா இருக்கு என்றும் சொல்லி இருந்தார். 

இவ்வாறு மணியின் காதலி வேறு ஒருவர் என்று மணியை பற்றி நிக்சனிடம் ரவீனா போட்டுக் கொடுத்துள்ளார். எனினும், பிக் பாஸ் ரசிகர்கள் ரவீனாவின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரை திட்டி வருகின்றனர். 

இதேவேளை, தற்போது ரவீனா,  மணியை பற்றி தப்பா பேசிய வீடியோ தான் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், இது மணியின் வெற்றியை பாதிக்குமா எனவும் கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement