• Dec 25 2024

'நல்லா வரும் வாயில..' கமல், மாயாவை இணைத்து சர்ச்சையாக பேசிய விஜய் டிவி பிரபலங்கள்! படுவைரலான வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7  பங்கு பற்றி தற்போது டைட்டில் வின்னருக்கான இறுதிக் கட்டம் வரை முன்னேறியவர் தான் மாயா கிருஷ்ணன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பல சர்ச்சைகளில் சிக்கிய போதும், அவரது நோக்கம் ஒன்றாகவே காணப்பட்டது. இதனால் பல்வேறு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

எனினும், பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய பிரதீப்க்கு, ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட சம்பவத்தில் மாயாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவே, பலர் அவரை வெறுக்கின்றனர். அதுபோலவே பிக் பாஸ் டைட்டில் மாயாவுக்கு கிடைக்க கூடாது எனவும் அவருக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பம் முதல் தற்போது வரையில் மாயா செய்யும் தவறுகள், அட்டூழியங்கள், விதி மீறல்கள் என ஒன்றையும் கமல் தட்டிக் கேப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து காணப்பட்டது.


இந்த நிலையில், விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி இருவரும் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கமல் மற்றும் மாயாவை இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்கள். தற்போது குறித்த சம்பவம் படு வைரலாகி வருகின்றது.

அதாவது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புகழ், இப்போ இன்ஸ்டாகிராமில் ரொம்ப பேசப்படும் ஒரு நபராகவும் பிசியான நபராகவும் இருக்கிறது கமல்ஹாசன் தான். அவரை போல பேசலாம் என்று குரோஸியிடம்  சொல்கிறார்.


இதை தொடர்ந்து பேசிய புகழ், ஐயா உங்களுக்கோ மாயாவுக்கும்... என்று இழுக்க, அதற்கு குரோஸி கமல்ஹாசன் குரலில் ஒண்ணும் கிடையாது என்று சொல்கிறார்.. 

மீண்டும் புகழ், அப்போ உங்களுக்கு பிடித்த இடம் என்று கேட்க, அதற்கு  கமல்ஹாசன் குரலில் பேசிய குரோஸி, மாயா ஜாலம் என்று சொல்கிறார்.

அதற்கு புகழ், உங்களுக்கு பிடித்த படம் என்று கேட்க, அதற்கு குரோஸி மாயாபஜார் என்று சொல்கிறார்.. அதனால் கோபமான புகழ் எங்களுக்கு வாயில நல்லா வரும் என்று சொல்கிறார்.


இதையடுத்து, கமல்ஹாசன் குரலிலேயே பேசிய குரோஸி, நான் மீண்டும் உங்களிடம் ஒன்று சொல்கிறேன். நான் யாருக்கும் சப்போர்ட்  பண்ணல. நான் கடவுள் இல்லை என்று சொல்றவனும் கிடையாது. ஆனால் கடவுள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்றவன், உங்கள் நான்... என்று பேசி முடிக்கிறார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது வெளியில் உள்ளவர்களை விட விஜய் டிவி பிரபலங்கள் தைரியமாக கமலை கலாய்க்கிறார்களே என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 


Advertisement

Advertisement