• Dec 27 2024

10 நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய்.. இயக்குநர் ஷங்கரிடம் ரேட் பேசிய ‘இந்தியன்’ நடிகை..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படத்தில் 10 நிமிட காட்சியில் நடிக்க ஒரு கோடி ரூபாய் ரேட் பேசியதாக ’இந்தியன்’ படத்தில் நடித்த நடிகை குறித்த செய்தி கசிந்துள்ளது.  

இயக்குனர் ஷங்கர் தற்போது ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இதில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்களும் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்தது. 

ஆனால் அதே நேரத்தில் முதல் பாகத்தில் நடித்த நாயகிகளான மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா ஆகிய இருவரும் இந்த படத்தில் நடிப்பதாக எந்தவித தகவலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மனிஷா கொய்ராலா இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. 



சமீபத்தில் மும்பையில் தனது மகளின் திருமண அழைப்பிதழை மனிஷா கொய்ராலாவிடம் கொடுக்க சென்ற இயக்குனர் ஷங்கர், அந்த 10 நிமிட கேரக்டர் குறித்து கூறியதாகவும் அதில் நடிக்க மனிஷா கொய்ராலா ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து சம்பள விஷயம் குறித்து பேசிய போது தான் 10 நிமிடம் கேரக்டரில் நடிக்க ஒரு கோடி ரூபாய் மனிஷா கொய்ராலா கேட்டதாக கூறியதை அடுத்து தயாரிப்பு தரப்பு அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. 

ஆனால் ஷங்கர் அந்த கேரக்டர் கண்டிப்பாக படத்தில் இடம்பெற வேண்டும் என்று கூறியதை அடுத்து வேறு வழியில்லாமல் தயாரிப்பு தரப்பு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் மனிஷா கொய்ராலா காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதே போல் ’இந்தியன்’ படத்தின் இன்னொரு நடிகையான ஊர்மிளாவிடமும் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் எத்தனை கோடி சம்பளம் கேட்பாரோ என்ற அச்சத்தில் தயாரிப்பாளர் உள்ளார்.

Advertisement

Advertisement