பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவுக்கு வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இறுதியாக முத்துக்குமரன், விஷால், ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் ரயான் ஆகிய 6 போட்டியாளர்களும் பைனலுக்கு தேர்வாகி இருந்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும். அந்த பணப் பெட்டியை எடுக்கும் போட்டியாளர் அத்துடன் நிகழ்ச்சி இருந்து வெளியேற்றப்படுவார். கடந்த ஏழு சீசன்களிலும் இவ்வாறு தான் நடைபெற்றது. அதேபோல இந்த சீசனிலும் யார் பணப்பெட்டியை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.
d_i_a
ஆனால் இம்முறை வித்தியாசமான டாஸ்க்கொன்றை வைத்தார் பிக்பாஸ். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக்கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை முதன்முறையாக குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்பட்டு அதனை குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்து வருபவர்களுக்கே பணம் சொந்தமாகும். அவ்வாறு ஒருவேளை வீட்டிற்குள் வர தவறினால் அவர்கள் எலிமினேட் ஆனதாக அர்த்தம்.
அந்த வகையில் முதலில் 50,000 கான பணப்பெட்டி வைக்கப்பட்டபோது அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்தார். அதன் பின்பு இரண்டு லட்சத்தை ரயான் எடுத்தார். மேலும் நேற்று எட்டு லட்சத்திற்கு பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை ஜாக்குலின் எடுக்க சென்று மீண்டும் வீட்டுக்குள் வருவதற்குள் கதவுகள் மூடப்பட்டது. இதனால் அவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த வாரம் பொங்கல் தினத்தை முன்னிட்டு பழைய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து வருகின்றார்கள். அந்த வகையில் இன்றைய தினம் ராணவ், ரஞ்சித் மற்றும் மஞ்சரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
Listen News!