தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷணா நடிப்பில் சமீபத்தில் டாக்கு மகாராஜா என்ற திரைப்படம் ரிலீசானது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடலில் நடிகை ஊர்வசி ரவுட்டேலடியுடன் ஆடிய நடனம் ட்ரோலான நிலையில் நடிகை அதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பு, ஆக்ஷன். டான்ஸ், வசனம் என எல்லாவற்றிலும் யார் என்ன நினைத்தால் என்ன என்று தன்னுடைய ஸ்டைலில் படத்தில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் ரசிகர்கள் ட்ரோல் செய்தாலும் கூட அவரது செயல்களை ரசிக்கவே செய்கிறார்கள். இந்த நிலையில் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் டாக்கு மகாராஜ என்கிற படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் லெஜண்ட் படத்தின் நடிகை ஊர்வசி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து " டபிடி டிபிடி "என்கிற ஒரு பாடலில் அதிரடி நடனமாடி இருக்கிறார் ஊர்வசி. இந்த நிலையில் ரசிகர்கள் பாலகிருஷ்ணாவுக்கு ஊர்வசிக்குமான 30 வருட வயது இடைவெளி இருக்கும்போது இப்படி ஒரு நடனம் தேவையா என்று தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
நிலையிலே நடிகை ஊர்வசி ரவுட்டேலா ரசிகர்களின் விமர்சனத்துக்கு இவ்வாறு பதிலளித்தார். "நான் கலையை கலையாக மட்டுமே பார்க்கிறேன். பாலகிருஷ்ணா போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அப்படிப்பட்டவருடன் இந்த கலையில் இணைந்து பயணித்ததை ஒரு நல்ல அனுபவமாக தான் நினைக்கிறேன். அது வெறும் நடனம் மட்டும் அல்ல கலையின் கடின உழைப்பை காட்டுகிறது. கலையை கலையாக பாருங்கள்" என்று கட்டமாக பதிலளித்தார்
Listen News!