• Dec 26 2024

மனோஜ்-க்கு திடீரென கிடைத்த பாட்டியின் ஸ்பெஷல் கிப்ட்.. முத்துவிடம் இருந்து பறிக்கப்படுகிறதா?

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் பாட்டி தன்னுடைய பிறந்தநாளில் சிறப்பான பரிசு கொடுப்பவர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் கொடுப்பதாக கூறியிருந்தார் என்பதும் இதனை அடுத்து அவரது தோழிகளை முத்து அழைத்து வந்ததை அடுத்து முத்து மற்றும் மீனாவுக்கு தான் அவர் ஸ்பெஷல் கிப்ட் கொடுத்தார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் தற்போது பாட்டியின் ஸ்பெஷல் கிப்ட் மனோஜ்க்கு கிடைக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதேவா, அதே சீரியலில் பாட்டியாக நடித்து வருபவரை கொல்லிமலைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவை எனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இதுவரை பாட்டி கொல்லிமலைக்கு சென்றதே இல்லை என்று கூறிய நிலையில் பாட்டிக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் நான் கொடுத்திருக்கின்றேன், என்று கூறிய அவர் ’தன் வாழ்க்கையில் பார்க்காத இடத்திற்கு பாட்டியை நான் கூட்டிட்டு வந்திருக்கிறேன், இதனை அடுத்து உங்களை நான் இம்ப்ரஸ் பண்ணி விட்டேன் அல்லவா, அப்படி என்றால் அந்த ஸ்பெஷல் கிப்ட் எனக்கு தானே’ என்று கூற பாட்டி ’ஆமாம்’ என்று கூறுகிறார்.

இந்த காமெடியான வீடியோ ஸ்ரீதேவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் அவர் இந்த வீடியோவில், ‘பாட்டிக்கு என்னுடைய ஸ்பெஷல் கிப்ட் எப்புடி? உங்க பாட்டிக்கு நீங்க கொடுத்த ஸ்பெசல் கிப்ட் என்னன்னு சொல்லுங்க? நான் பிறந்ததிலிருந்து என் பாட்டியை பார்த்ததில்லை, இவர்களை பார்க்கும்போது அப்படி ஒரு உணர்வு என பதிவு செய்துள்ளார்.

Advertisement

Advertisement