• Dec 26 2024

ரஜினிக்கு அடுத்தவன் பொண்டாட்டி மேல தான் கண்ணு.. மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், ரஜினிகாந்துக்கு அடுத்தவன் பொண்டாட்டி தான் செட் ஆகும் என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போதும் 70 வயதிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் கடந்த சில ஆண்டுகளாக இளம் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வருகிறார். ’லிங்கா’ திரைப்படத்தில் அனுஷ்கா மற்றும் சோனாக்ஷி சின்ஹாவுடன்  ஜோடியாக நடித்ததை அடுத்து நெட்டிசன்கள் கேலி செய்தால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே அவர் தன்னுடைய படத்திற்கு 30 வயதிற்கும் மேற்பட்ட நடிகைகளையே ஒப்பந்தம் செய்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் பேசிய மன்சூர் அலிகான் ’ரஜினியின் வயதுக்கு தற்போது ஜோடி தேடுவது சிரமமாக உள்ளது என்றும், அவருக்கு 20, 25 வயதில் நடிகைகள் செட்டாகாது என்றும் திருமணம் ஆனவர்கள் அதாவது அடுத்தவன் பொண்டாட்டிகள் மட்டுமே அவருக்கு செட் ஆகும் என்றும் அதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாராயை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்  பெரிய நடிகர்களின் படங்களால் தான் சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படுகிறது என்றும் சின்ன பட்ஜெட் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement