• Dec 27 2024

அமீர்கான் மகனின் படத்துக்கு போடப்பட்ட தடை நீக்கம்! இதிலும் வாரிசு அரசியலா?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் சினிமா துறையில் முன்ணி நடிகர்களின் வாரிசுகள் இலகுவாக சினிமா பின்னணியுடன் சினிமாவுக்குள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறே அமீர் கானின் மகனான  ஜூனைத் கான் நடித்துள்ள திரைப்படம் மஹாராஜ் ஆகும்.


ஜுனைத் கானின்  நெட்ஃபிக்ஸ் படமான மஹாராஜ் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் குறித்த திரைப்படமானது ஜூன் 14 அன்று வெளியிடப்பட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் குறித்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு காணப்பட்டது 


இந்த நிலையிலேயே குறித்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு காணப்பட்ட இடைக்கால தடையை நீதி மன்றம் நீக்கியுள்ளது. இந்த படத்தில் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக எந்த காட்சியும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்த பிறகு,  நீதிபதி சங்கீதா விசென் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டாா். இது அமீர்கானின் செல்வாக்கு மூலமே நடை பெற்றது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement