• Dec 25 2024

மன்னிப்பு கேட்டார் மன்சூர்... மாங்கல்ய தேங்கா வலம்வரும் போது ஆசிர்வதிப்பாராம்... புளூ சட்டை மாறன் டுவிட் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த சில நாட்களாக இணையத்தில் பகிரங்கமாக வலம் வந்து கொண்டிருந்த விடையம் தான் நடிகை திரிஷா- மன்சூர் அலிகான் விவகாரம். சமீபத்தில் மன்சூர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது நடிகை திரிஷா குறித்து கொச்சையாக பேசி இருந்தார். அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை  திரிஷா அவர்களும் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் நடிகை திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் என பல முன்னணி பிரபலங்கள் மன்சூர் அழிக்கானுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட் பதிவு செய்திருந்தனர். மேலும் பல ரசிகர்களும் இணையா வாசிகளும் கூட திர்ஷாவிற்கு ஆதரவாக பேசி இருந்தனர்.


அந்த சந்தர்ப்பத்தில் பிரபல யூடியூப்பர் புளூ சட்டை மாறன் அவர்கள் நடிகை திர்ஷாவிற்கு ஆதரவாக டுவிட் ஒன்றை பகிர்த்திருந்தார். அதில் பிரபல நடிகர்களை வம்புக்கு இழுத்து உங்களுக்கு எதுக்கு மீசை திஷாவிற்கு எதிராக பலரும் ஆதரவு தெரிவிக்கும்பட்ச்சத்தில்  இவர்கள் அமைதியாக இருக்கின்றனர் என ஒரு டுவிட்டை போட்டு குட்டையை குழப்பி விட்டார்.


இந்த ட்டுவிட்டால் பல முன்னணி நடிகர்களும் ரோல் செய்யப்பட்டனர். பிறகு மன்சூர் அலிகானுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இன்று போலீசில் ஆஜராகி இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் திரிஷா அவர்களிடம் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


அதை ஒரு அறிக்கை வாயிலாகவே அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்  அவர் கூறியதாவது " அடக்க நினைத்தால் அடங்க மறு  இப்போ சொல்கிறேன் திரிஷா என்னை மன்னித்துவிடு. ஒரு வாரம் நடந்த கத்தி இன்றி ரத்தம் இன்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன் எனவும் நின் மாங்கல்ய தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வாயாக எனவும் குறிப்பிட்டிருந்தார். 


இந்த பதிவை தனது டுவிட் பக்கத்தில் பகிர்ந்த புளூ சட்டை மாறன் மன்சூர் மன்னிப்பு கேட்டார். த்ரிஷாவின் திருமணத்தின்போது ஆசீர்வாதம் செய்வேன் என தகவல்‌ தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்


Advertisement

Advertisement