• Jan 13 2025

அடக்க நினைத்தால் அடங்கமறு... திரிஷாவே என்னை மன்னித்து விடு... பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் திரிஷா தொடர்பாக  பேசியது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இதன் காரணமாக நடிகர் மன்சூர் அலிக்கானும் அதற்கான விமர்சனத்தை அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் திரிஷா அவர்களிடம் தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


அதை ஒரு அறிக்கை வாயிலாகவே அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில்  அவர் கூறியதாவது " அடக்க நினைத்தால் அடங்க மறு  இப்போ சொல்கிறேன் என்னை மன்னித்துவிடு. ஒரு வாரம் நடந்த கத்தி இன்றி ரத்தம் இன்றி போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். 


எனக்காக வாதிட்ட தலைவர்கள் , நடிகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி. எதிர்த்து என்னை வாதிட்ட  மானுடர்களுக்கும் எனது வணக்கங்கள். கலிங்க போர் முடிந்தது. இன்னும் பல விடையங்களை கூறி  திஷாவே என்னை மன்னித்துவிடு என பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் மன்சூர் அலிகான்.

Advertisement

Advertisement