• Apr 13 2025

குறி வச்சாச்சு.. வேட்டைக்கு தயாரான ‘வேட்டையன்’.. ரிலீஸ் தகவலை அறிவித்த லைகா..!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜனி காந்த். எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையை மட்டும் நம்பி சினிமாதுறைக்குள் வந்து இன்றளவிலும் முதல் இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இவர் நடிக்கும் அடுத்தப்படமான வேட்டையன் திரைப்படத்தின் அப்டேட்டை கொடுத்தது லைக்கா நிறுவனம் 


லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் , தோணி , ஜெய் பீம் போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த டீ ஞானவேல் இயக்கத்தில் , ரஜனி நடிப்பில் தயாராகும் திரைப்படம் வேட்டையன் ஆகும். குறித்த படத்தில் அமிதாப்ட்சன் , பகத் பாசில் , ரித்திகா சிங் போன்ற பல முன்னணி நடிகர்களும் இணைக்கின்றனர்.


ரஜனியின் நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்தே வேட்டையன் திரைப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. அவ்வாறே குறித்த திரைப்படம் வருகின்ற ஒக்டோபர் மாதம் வெளியாகும் வேட்டைக்கு தயாராகுங்கள். என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.    

Advertisement

Advertisement