• Dec 25 2024

தளபதியை கொண்டாடும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள்...! வைரலாகும் மாஸ் வீடியோ...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி இன்று நடிகர் ரஜனிகாந்த், மம்முட்டி நடித்து வெளியான  தளபதி படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆரவாரமாக பார்த்து கொண்டாடும் காட்ச்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன. நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். தலைவரின் திரைப்படம் ரிலீஸ் அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரிய பண்டிகை. 


சூப்பர்ஸ்டார் ரஜினி, மெகா ஸ்டார் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த படம் தான் தளபதி. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் அத்தனைப் பாடல்களும் அருமை. சுந்தரி கண்ணால் ஒரு சேதி, யமுனை ஆற்றிலே, ராக்கம்மா கையத்தட்டு, காட்டுக்குயிலு ஆகிய பாடல்கள் செம மாஸ். 


இந்நிலையில் இணையத்தில் ஒரு சில வீடியோக்கள் வைரலாகி வருகிறது அதில் ரசிகர்கள் தளபதி திரைப்படத்தினை கொண்டாடுகின்றனர். இந்தப் படத்தைப் பார்க்க 2கே கிட்ஸ்களும் ஆவலாக இருப்பதால்  ரசிகர்ளின் எண்ணிக்கை இந்தளவுக்கு அதிகமாக இருக்கிறது. 


ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்தின் மீதான ஆர்வம் குறையாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. நள்ளிரவில் இருந்து தியேட்டர்களில் வரிசையாக நின்று நடனமாடி, சூப்பர் ஸ்டாரின் கட் அவுட்டில் பால் தெளித்து, திரைப்படம் தொடங்கும் போது தியேட்டருக்குள் விசில் அடித்து கொண்டாடுவார்கள். அதே போல பாடலையும் பாடி வைப் செய்கிறார்கள் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ 


Advertisement

Advertisement