• Dec 25 2024

சூப்பர் ஸ்டார் பிறந்தநாள்! முதல்வர் முதல் கமல் வரை பிரபலங்கள் பகிர்ந்த வாழ்த்துக்கள்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள் என்று சொன்னாலே அது ரசிகர்களுக்கு திருவிழாதான். ரஜனிகாந்த்தின் திரைப்படங்களை கொண்டாடும் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளையும் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளங்களை சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. 


ரஜனிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இருக்கு, ஸ்டைல் இருக்கு. இப்படி பெயருக்கான பல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இந்த வயதிலும் யாருமே எதிர்ப்பார்க்காத அளவிற்கு சினிமாவில் டப் கொடுக்கிறார் மேலும் வசூல் நாயகனாக டாப்பில் உள்ளார். ஏராளமான வெற்றி படங்களை கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் நிறைந்துள்ளார்  ரஜனிகாந்த். 


இன்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ஜெயிலர் 2 அப்டேட் , கூலி திரைப்படத்தின் அப்டேட் என இன்று ரசிகர்களுக்கு சூப்பரான செய்திகள் வெளியாக இருக்கிறது.  தற்போது 74வது பிறந்தநாளை கொண்டாடும் ராஜனிகாந்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த பிரபலங்களின் வாழ்த்து...  


Advertisement

Advertisement