• Dec 26 2024

"பஞ்சாயத்" இந்தி சீரியலை தமிழ் கலாச்சாரத்துக்கு மாத்துனோம்! "தலைவெட்டியான் பாளையம்"-இயக்குனர்

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

ஸ்டான்ட் அப் காமெடியன் அபிஷேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தலைவெட்டியான் பாளையம்'  நாகாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரியல். இந்த வெப் சீரியலில் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 


இந்த வெப் சீரிஸ் பற்றி இயக்குநர் நாகா பேசுகையில், "'பஞ்சாயத்' சீரிஸ் பிரபலமானதுக்குப் பிறகு எல்லா மொழிகளிலேயும் பண்றதுக்கு திட்டமிட்டாங்க. அந்த நேரம் தமிழ்ல பண்றதுக்கு என்னுடைய பெயரை யாரோ சொல்லியிருக்காங்க. தமிழுக்குப் பண்ணும்போது நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி சில விஷயங்களை மாத்தியாகணும். சீரிஸோட ஒரிஜினல் கிரியேடர்ஸ்கிட்ட நான் ரீமேக் பத்தி பேசினேன். அவங்ககிட்ட தமிழுக்கு ஏத்த மாதிரி விஷயங்கள் மாத்தணும்னு சொன்னேன். அதுக்கு அவங்க 'உங்க கலாச்சாரம் எனக்குத் தெரியாது. நீங்க பார்த்துக்கோங்க'னு சொல்லிட்டாங்க." 


தொடர்ந்து பேசிய அபிஷேக், "நான் ரீமேக்லாம் பண்றதுக்கு முன்னாடியே 'பஞ்சாயத்' வெப் சீரிஸ் பார்த்துட்டேன். நான் அந்த சீரிஸுக்கு பெரிய ஃபேன். இதோட ரீமேக்ல முதன்மை கதாபாத்திரத்துல நடிக்கிறதுக்குக் கேட்டபோது எனக்குக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு. பெரியளவுல வரவேற்பைப் பெற்ற ஒரு சீரிஸோட ரீமேக்ல நடிக்கிறது கொஞ்சம் பிரஷரான விஷயம். இருந்தாலும் இந்த வாய்ப்பைத் தவறவிட்டுடக் கூடாது. அதுனால கண்ணமூடிட்டு இந்த சீரிஸ்ல நடிக்க ஓகே சொல்லிட்டேன்.


'மர்மதேசம்' தொடருக்குப் பிறகு சேத்தனும், தேவதர்ஷினியும் சேர்ந்து இயக்குநர் நாகா இயக்கத்தில் இந்த சீரிஸில் நடித்திருக்கிறார்கள். இந்த சீரிஸ் பற்றி விவரிக்க தொடங்கிய தேவதர்ஷினி, "பஞ்சாயத் சீரிஸின் ரசிகராக ரீமேக் பத்தி கேட்கும்போது கொஞ்சம் ஷாக்கிங்காகத்தான் இருந்திருக்கும். அபிஷேக் சொன்ன மாதிரி அதை ரீமேக் பண்றது ஒரு முக்கியமான பொறுப்பும்கூட. ஆனா, நாகா சார் இந்த சீரிஸை ரீமேக் பண்ணும்போது 'அடிச்சு தூள் கிளப்பிடலாம்'னு தோனுச்சு." எனக் கூறினார்.


Advertisement

Advertisement