• Dec 25 2024

பெண் கொடுத்த பாலியல் புகார்! குற்றம் செய்தது உண்மை! புகாரை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல நடன இயக்குநரான ஜானி கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். இதையடுத்து ஐதராபாத் அருகில் உள்ள நர்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 


தொடர்ந்து தெலுங்கு திரை உலகில் நடன இயக்குநராக ஜானி பணிபுரிவதற்கு பிலிம் சேம்பர் தடை விதித்தது. மேலும் பவன் கல்யாண் கட்சியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். எனக்கு 16 வயதாக இருக்கும்போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான 40 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் இளம்பெண் சமர்பித்தார்.


இதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜானியை கோவாவில் வைத்து தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், புகார் கொடுத்த பெண் மைனராக இருக்கும் போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement