• Dec 26 2024

மாயா என்றால் மேஜிக்கா?- கோட் வேர்டை போட்டு டைட்டில் வின்னர் யார் என்று கண்டு பிடித்த பிரபலம்- கமல்ஹாசனை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் பல வாரங்களாக தொடர்ந்து மாயா காப்பாற்றப்பட்டு கிராண்ட் ஃபினாலே வரை  வந்து விட்டார். இதனால் இவர் கிராண்ட் ஃபினாலே வரை வரைக்கும் வந்தமைக்கு கமல்ஹாசன் தான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

அந்த வகையில் தற்பொழுது மாயாவுக்கு மேஜிக் என்கிற கோட் வேர்டை போட்டு ஜோ மைக்கேல் ஒரு ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க முடியாத நியாயம், நேர்மை, நீதியை எல்லாம் கமல்ஹாசன் இந்த ஆண்டு வெளியாக உள்ள இந்தியன் 2வில் சொல்லும் போது பார்த்துக் கொள்ள வேண்டியது தான் இந்த வாரம் கரிகாலன் மேஜிக் ஷோவை நடத்த கமல் ரெடியாகி விட்டார் என கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும் என ஜோ மைக்கேல் பதிவிட்டுள்ளார்.


உங்களுக்கு மட்டும் ஏவி போட்டு மாயா தான் டைட்டில் வின்னர்னு காட்டிட்டாங்களா? இப்பவே ஏன் நெகட்டிவிட்டியை பரப்புறீங்க டைட்டில் வின்னர் அறிவிப்பு வெளியானதும் விமர்சனத்தை வைங்க, முன்னாடியே வைக்கிறது உங்களுடைய கேரக்டரை தான் தெளிவா காட்டுது என கமல் ரசிகர்கள் ஜோ மைக்கேலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். 


சனம் ஷெட்டி, ஜோ மைக்கேல் உள்ளிட்ட பிக் பாஸ் விமர்சகர்கள் தொடர்ந்து இந்த சீசனில் போட்டியாளர்களை பற்றி பேசுவதை விட அதிகமாக கமல்ஹாசனை மட்டுமே ட்ரோல் செய்து வருவதாக அவரது ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement