• Dec 26 2024

தன்னுடைய பெற்றோருக்கு எதிராகத் திரும்பிய ஜெனி, பாக்கியா முன்னாடி கோபிக்கு நேர்ந்த அவமானம், கடும் கோபத்தில் ராதிகா- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி, ராமமூர்த்தி, பாக்கியா மூன்று பேரும் ஜாக்கிங் வரும் போது, அங்கு பாக்கியாவைக் கண்ட சிலர் பாக்கிாவைப் புகழ்கின்றனர். சின்னதாக மசாலாக் கடை ஆரம்பிச்சு இப்போ பெரிய அளவில முன்னேறி இருக்கிறீங்க அதெப்படி மேடம் என்று கேட்கின்றனர். அதற்கு பாக்கியா எனக்கு என் பிள்ளைகளும் அத்தை மாமாவும் தான் ரொம்ப சர்ப்போட் பண்ணினாங்க.

அதை விட நம்மளால எதுவும் பண்ண முடியாது என்று நினைக்கிறவங்களாலும் தான் என்னால் எவ்வளவு துாரம் வர முடிஞ்சுது என்று சொல்ல கோபி என்ன சொல்லுவதென்று தெரியாமல் தலையைக் குனிந்த படி நிற்கின்றார். தொடர்ந்து  ரூமுக்குள் அமிர்தா இருக்க அங்கு எழில் வருகின்றார்.


அவர் அமிர்தாவை வெளியில் வரச் சொல்லி சொல்ல அமிர்தா தான் வரல ரூமுக்குள்ளையே இருப்போம் என்கின்றார். அப்போது எழில் சரி வாங்க எங்கையாவது வெளில போய்ட்டு வருவோம் என்று சொல்ல, அமிர்தா மறுப்புத் தெரிவிக்க நிலாவுக்காக வெளில போவோம் என்கின்றார்.

பின்னர்,பாக்கியா ஜெனியைப் பார்க்க அவரது வீட்டிற்கு போகின்றார். ஆனால் ஜெனியின் அம்மா ஜெனியைப் பார்க்க முடியாது போங்க என்று சொல்ல அந்த நேரம் ஜெனி வந்து நான் ஆன்ட்டி கூட பேசிக் கொள்கிறேன் நீங்க போங்க என்று சொல்லி விட்டு பாக்கியாவை தன்னுடைய ரூமுக்கு கூட்டிட்டு போகின்றார்.


அங்கே போனதும் பாக்கியா தான புதிதாக ஹொட்டல் ஆரம்பிகக போகும் விஷயத்தைச் சொல்ல, ஜெனி சந்தோசப்பட இந்த சந்தோசத்தைப் பார்ப்பதற்காகக் தான் வந்தேன். நீயும் எனக்கு எவ்வளவு சர்ப்போட் பண்ணியிருக்கிற என்று சொல்லி விட்டுச் செல்கின்றார். தொடர்ந்து வீட்டில் ராதிகா கோபியுடன் கோபமாக இருக்கின்றார்.

அதற்கு கோபி இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சொல்ல, ராதிகா ஆபீஸிற்கு போகலையா என்று கேட்டதும் கோபி என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்கின்றார்.அத்தோடு தன்னுடன் வேலை செய்பவரின் வெடிங் ரிஷப்சனுக்கு போகனும் அதையும் மறந்திட்டீங்களா என திட்டி விட்டுச் செல்கின்றார்.


மறுபுறம்  ஜெனி வீட்டில் குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி சொல்ல ஜெனி செழியன் கிட்டையும் இது பற்றி சொல்லனும் செழியன் தானே குழந்தையோட அப்பா என்று சொல்ல, ஜெனியின் அப்பா அவன் எல்லாம் இங்க வரக்கூடாது எனத்திட்டி விட்டு போக இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement