• Jul 22 2025

கடைசி நேரத்தில் ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ..! ஆனால் சாட்சி சொன்னாரா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்பதை பார்ப்போம்.

குறித்த ப்ரோமோவில் ஈஸ்வரிக்கு எதிராக சாட்சியங்கள் எல்லாம் இருந்த காரணத்தினால் அவருக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் முடிவு எடுக்கின்றது.

அதன்படியே ஈஸ்வரிக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படுவதால்  ஈஸ்வரி தான் குற்றவாளி என இந்த நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதைக் கேட்டவுடன் ஈஸ்வரி கதறி அழுகின்றார். ராமமூர்த்தியும் அழுகின்றார்.


அந்த நேரத்தில் பாக்கியா அங்கு வந்து வக்கீல் உடன் கதைத்து விட்டு மயூவை அழைக்க செல்கிறார். மேலும், இந்த வழக்கில் இறுதியாக ஒருவரை விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைக்கிறார்கள்.

பாக்கியா மயூவை அழைத்து வரும்போது கோபி, ராதிகா, கமலா ஆகியோர் மயூவா என அதிர்ச்சியில் பார்க்கின்றார்கள். ஈஸ்வரியும் அதிர்ச்சியாக பார்க்கின்றார். எனவே மயூ சொல்லப்போகும் சாட்சியால் ஈஸ்வரி விடுதலை ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement