• Dec 26 2024

உங்கள் மகள் அதிதியை இப்படி நடிக்க வச்சிருப்பிங்களா? ஷங்கரிடம் கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றுள்ளது மட்டுமின்றி,  இந்த படத்தின் பல காட்சிகளை கேலி கிண்டல் செய்து நெட்டிசன்கள் மீம்ஸ்களாக பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கரின் படம் என்றால் பிரம்மாண்டம் என்ற நிலையில் இந்த படத்திலும், பிரமாண்டம் உள்ளது, ஆனால் அவரது படத்தில் வழக்கமாக இருக்கும் எமோஷன் காட்சிகள், கதை இல்லை என்று தான் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் மிஸ் யுனிவர்ஸ் அழகியை விதவிதமான காஸ்டியூம்களில் பாட வைத்துள்ளார்கள், ஆட வைத்துள்ளார்கள். இந்த பாடலுக்கும் படத்தின் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்றும், பிரமாண்டம் என்ற பெயரில் கதைக்கு சம்பந்தம் இல்லாத காட்சிகள் ஏராளமாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.



குறிப்பாக காலண்டர் பாடலில் ஆடும் மிஸ் யுனிவர்ஸ் உள்பட அனைத்து டான்ஸர்களும் மிகவும் குறைந்த ஆடையில் ஆபாசமான காஸ்டியூமில் நடனம் ஆடினார்கள் என்றும், உங்கள் மகள் அதிதியை இப்படி ஆட வைப்பீர்களா ஷங்கர்? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் ஷங்கரிடம் சரக்கு தீர்ந்து போச்சு என்பது தான் இந்த படம் காட்டுகிறது என்றும்,  ஷங்கர் பேசாமல் அட்லியிடம் உதவி இயக்குனராக சென்றுவிடலாம் என்றும் நெட்டிசன்கள்  கலாய்த்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஷங்கர் தனது முதல் முழு திறமையை ’கேம் சேஞ்சர்’ படத்தில் காட்டி இருப்பார் என்றும் அந்த படம் நிச்சயம் அவரது பழைய மதிப்பையும் மரியாதையும் கொண்டு வந்து சேர்க்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement