• Dec 25 2024

மனோஜுக்கு போட்டியாக முன்னேறும் மீனா... வசமாக சிக்கிய கறிக்கடைக்காரர்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டில், விஜயா உட்பட வீட்டாருக்கு கரண்ட் ஷாக் அடிக்க, வேறு வழி இல்லாமல் விஜயாவை உருட்டு கட்டையால் அடித்து காப்பாற்றுகின்றார் மீனா. அதன் பின்பு அங்கு வந்த முத்து என்ன நடந்தது என்று கேட்க, எல்லாருக்கும் கரண்ட் ஷாக் அடித்ததாக சொல்லுகின்றார்.

இதனால் யாரு சுவிட்சை போட்டது என்று கேட்க, மனோஜ் நான் தான் போட்டேன் என்று சொல்லுகின்றார். அதை போட வேண்டாம் என்று தானே சொன்னேன் பிறகு ஏன் போட்டாய் என்று மனோஜ்க்கு முத்து திட்டுகின்றார். அதன் பின்பு பார்வதி மீது விஜயா கோபத்தில் இருப்பதால் தான் பிறகு வருவதாக பார்வதி சென்று விடுகிறார்.

d_i_a

இதை தொடர்ந்து மீனாவுக்கு கல்யாண மண்டபத்தில் இருந்து கால் வருகின்றது. அங்கு போன மீனாவுக்கு அட்வான்ஸ் ஆக 10 ஆயிரம் கொடுத்து திருமண மண்டபம் ஒன்றை அலங்கரிப்பதற்கு ஆடர் கிடைக்கின்றது. இதனால் சந்தோஷப்பட்ட மீனா வீட்டிற்கு வந்ததும் அண்ணாமலைக்கு ஸ்வீட் கொடுக்கின்றார்.


ஆனாலும் விஜயா இது என்ன பெரிய விஷயமா என்று வழக்கம் போல மீனாவை திட்டுகின்றார். அதன் பின்பு எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்க, மனோஜும் மீனாவை மட்டம் தட்டி பேசுகின்றார். ஆனால் முத்து மீனாவும் ஒரு நாள் தொழிலதிபர் ஆவார் என்று நம்பிக்கை கொடுக்கிறார்.

மேலும் இந்த சந்தோஷத்தை கொண்டாட இன்றைக்கு எல்லோருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுக்குமாறு சொல்ல, அந்த நேரத்தில் அட்வான்ஸை எடுத்து முத்துக்கு கொடுக்கின்றார் மீனா. இதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் அதிர்ச்சி அடைகின்றார்கள். அதன் பின்பு சிக்கன் வாங்குவதற்காக கடைக்கு சென்றபோது அங்கு ரோகினியின் மலேசியா மாமா கறிக்கடையில் நிற்கின்றார். 

ஆனாலும் மீனாவை பார்த்ததும் அவர் தலையில் துண்டை போட்டு மறைத்து விடுகின்றார்.  யார் என்று தெரியாமல் மீனா சிக்கன் வாங்கி விட்டு சென்று விடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement