• Dec 25 2024

பாக்கியாவை நிற்க வைத்து ராதிகா கேட்ட கேள்வி.? சாபம் விட்டு துரத்திய ஈஸ்வரி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா ஈஸ்வரியையும் இனியாவையும் வீட்டிற்கு போயிட்டு வருவோம் என்று அழைக்கின்றார். இங்கு இருந்து கோபியை பார்க்க முடியாது என்று சொல்லி அவர்களை அழைத்துச் செல்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்குச் சென்ற பாக்யா அவர்களுக்கு சாப்பாட்டை கொடுத்துவிட்டு மீண்டும் ராதிகா வீட்டுக்கு சென்று பார்க்கின்றார். ஆனால் அப்போதும் கதவு பூட்டு போட்டிருக்கின்றது. ராதிகா ஃபோனுக்கு எடுக்கவும் அவர் போனை ஆன்சர் பண்ணவில்லை.

இதை தொடர்ந்து மறுநாள் ஈஸ்வரி மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வந்து கோபியை பார்க்க வேண்டும் என்று கதறுகிறார். ஆனாலும் அவருக்கு செழியன், எழில் ஆறுதல் சொல்லுகின்றார்கள். இன்னொரு பக்கம் ராதிகா கோபியை தேடி ஆட்டோவில் அலைந்து திரிந்து இறுதியில் வீட்டிற்கு வந்து அழுது ஒப்பாரி வைக்கின்றார்.

d_i_a

அந்த நேரத்தில் பாக்யா போன் பண்ணி ஹாஸ்பிடலுக்கு கொஞ்சம் வருமாறு சொல்லுகின்றார். இதனால் ராதிகாவும் ஹாஸ்பிடலுக்கு வர, கோபிக்கு நேற்று ஹார்ட் அட்டாக் வந்துச்சு நான் தான்  ஹாஸ்பிடலில் சேர்த்தேன் என்று சொல்ல, அவர் உடனே உள்ளே சென்று கோபியை பார்க்க முயற்சி செய்கின்றார்.


ஆனால் அங்கிருந்த ஈஸ்வரி ராதிகாவை உள்ளே போக விடாமல் உன்னால தான் என் பையனுக்கு இப்படி ஆயிற்று என்று அவரை திட்டியதோடு நீ நல்லாவே இருக்க மாட்ட.. நாசமா போய்டுவா என்று சாபம் விடுகின்றார். இதனால் பாக்கியா அவரை வெளியே  அழைத்து வந்து அவருக்கு ஆறுதல் சொல்ல, எல்லாரும் ஹாஸ்பிடலில் இருக்கின்றார்கள் ஆனால் எனக்கு மட்டும் விஷயம் தெரியவில்லை என்று ராதிகா கேட்கிறார்.

இதனால் உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்லை உங்களுக்கு போன் பண்ணினேன் ஆனால் சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. இரண்டு தடவை வீட்டுக்கு வந்தேன் கதவு பூட்டு போட்டிருந்தது என்று பாக்யா சொல்ல, அவர் புலம்பி அழுகின்றார். மேலும் கோபியை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று இறுதியாக வெளியே நின்று கோபியை பார்க்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement