• Dec 25 2024

தமிழின் நினைவால் உருகும் மேக்னா - ராகினியின் மொத்த சொத்தையும் எழுதி வாங்க பக்கவா பிளான் போடும் அர்ஜுன்! Thamizhum Saraswathiyum

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில், குழந்தையை குளிப்பாட்டி பொட்டு வைத்துக் கொண்டே 'உங்க அப்பா பாரு உன்னை தூக்கம பெரிய  வேலை செஞ்சுட்டு இருக்காரு' என ராகினி சொல்ல, 'ஆபீஸில் புது ஆர்டர் வந்திருக்கு, அத தான் பாத்துட்டு இருக்கன் என்று அர்ஜுன் உடனே கூறுகிறார்

இதற்கிடையில், குழந்தைக்கு எண்ணெய் தேய்ப்பது தொடர்பில் வாக்குவாதம் வர, இதனால் கோவமடைந்த அர்ஜுனின் அம்மா, 'எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொல்றியா?' என கேட்க, அப்படியில்ல சின்ன வயசுல இருந்தே என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு எங்க அம்மா எனக்கு சொல்லி குடுத்து இருக்காங்க' என சொல்கிறார்.  

இதையடுத்து, 'இவ என்ன இவ்வளவு திமிரா பேசுற? எதுக்கெடுத்தாலும் கோதை கோதை என்றா..மறுபடியும்சேந்துப்பாங்களோ' என சொல்ல,  'இதுக்கெல்லாம் ஒரு முடிவு பண்றன்' என அர்ஜுன் கூறுகிறார்.


மற்றோரு பக்கம், கம்பெனியில் இருக்கும் தமிழுக்கும் ஏனையவர்களுக்கும் டீ போட்டுக் கொடுக்கிறார் சரஸ்வதி. மேக்னா சாப்பிடாமல் இருப்பதால் அவரை சாப்பிட்டு வருமாறு தமிழ் சொல்கிறார். வீட்டிற்கு சென்ற மேக்னா, 'பசிக்குது ஏதாவது செஞ்சுதாம்மா' என கேட்க, 'இதோ ஐஞ்சு நிமிஷத்துல செஞ்சு தரேன்னு' வேலைக்கார அம்மா சமைக்க போகிறார்.அந்த நேரத்தில் தமிழை நினைத்து பார்க்கிறார் மேக்னா.


அடுத்த பக்கம், தனது மனைவியின் மொத்த சொத்தையும் ஆட்டையை போட பிளான் பண்ணுகிறார் அர்ஜுன். அதன்படி, 'நான் சொன்னா ராகினி கேட்க மாட்டா. அவளுக்கு சந்தேகம் வரும். ஆனா சொல்ல வேண்டிய ஆள் சொன்னா கண்டிப்பாக கேட்பா' எனக் கூறுகிறார்.

அதன்படி, தான் போட்ட திட்டபடியே காய் நகர்த்த்துகிறார். இறுதியாக, ராகினி தன் வாயாலயே 'அர்ஜுன் நீங்க தானே எல்லா பிசினஸையும் பாத்துக்குறிங்க நீங்களே சேர்மனா இருங்க. அதுக்கான வேலையை பாருங்க ஆடிட்டர் சார்' என அவரே கூறிவிடுகிறார். இதேவேளை, ராகினி அனைத்து சொத்தையும் எழுதி கொடுப்பாரா மாட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement

Advertisement