• Dec 25 2024

வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து மாஸாக போஸ் கொடுத்த கமல், மம்முட்டி, மோகன்லால்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் தான் கமல்ஹாசன்.இவர் நடிப்பில் தற்பொழுது  இந்தியன் 2, கல்கி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றது.இது தவிர பிக்பாஸ் நிகழ்ச்சியினையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால்  மூன்று பேருமே வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்து மாஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை சினிமா ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நடிப்பின் அசுரர்களான கமல், மம்முட்டி, மோகன்லால் மூவரையும் ஒரே மேடையில் பார்க்க சூப்பராக இருக்கிறது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


 இந்த போட்டோ கேரளாவின் திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் 'கேரளம் 2023' என்ற கலை, கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நவம்பர் 1ம் தேதி முத்ல் 7ம் தேதி வரை இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில், கேரளாவின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக கலை நிகழ்ச்சிகள், உணவு திருவிழாக்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


 இதன் தொடக்க நிகழ்ச்சியில் கமல், மம்முட்டி, மோகன்லால் மூவரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ தான் இது என்பது தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்துள்ளார்.இவர்களுடன் மஞ்சு வாரியர், ஷோபனா ஆகியோரும் கேரளம் 2023 நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement