• Dec 26 2024

மேக்னாவை பார்த்து இன்பரஸ் ஆகும் தமிழ்! கதையில் புது ஷாக் ட்விஸ்ட்? தமிழும் சரஸ்வதியும்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்குது என பார்ப்போம் வாங்க....

அதன்படி, மேக்னாவும் தமிழும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு சரஸ்வதி வந்துவிடாமல் நமச்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் மேக்னாவிற்க்கு உண்மை தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மேக்னாவின் மாமா இதற்கு மேலே நாம் ஆபீஸ் போய் பேசிக்கொள்ளலாம் என்று அங்கிருந்து கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.

மேலும், மேக்னாவின் மாமா நான் நமச்சியையும் சரஸ்வதியையும் ஹோட்டலில் விட்டுவிட்டு ஆபீசுக்கு வருகிறேன். நீங்க ரெண்டு பேரும் காரில் ஆபீசுக்கு போங்க என்று அனுப்பி வைக்க அதற்கு தமிழும் வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொள்கிறார். அதை தொடர்ந்து தமிழ் மேக்னா ஆபீஸ்க்கு செல்கிறார்.


அங்கு மேக்னா தன்னை பரபரப்பாக காட்டிக் கொள்கிறார். இதை பார்த்து தமிழ் இன்பரஸ் ஆகிறார். 30 கம்பெனிகளையும் ஒரே ஆளாக மேக்னா சமாளிப்பதை பார்த்து பெருமையாக தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார். 

மறுபக்கம் அர்ஜுனுக்கு தமிழ் பெங்களூர் சென்று இருப்பது தெரிய வந்துவிடுகிறது. தன்னுடைய மாமாவிடம் பெங்களூருக்கு இரண்டு டிக்கெட் போட சொல்கிறார். அதற்கு ராகினி எதற்காக பெங்களூர் போறீங்க என்று கேட்க, அதற்கு அர்ஜுன் தமிழ் அந்த ஆர்டரை முடிப்பதற்காக வேறு ஒரு கம்பெனியை பார்க்க போகிறார். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் அப்படி நிறுத்தினால் தான் அந்த ஆர்டர் நமக்கு கிடைக்கும்.

அத்தோட, உங்க அண்ணன் தமிழ் எல்லாரிடமும் எனக்கு ஆர்டர் கொடுக்கக் கூடாது என்று சொல்லி இருக்கார் போல, யாருமே நமக்கு ஆர்டர் தாரங்க இல்ல என சொல்ல, அதை கேட்டு ராகினியும் அண்ணன் ஏன் இப்படி நடக்கிறார்? ஏன் இவ்வளவு சீப்பா நடந்துக்கிறார்னு தெரியல, உங்களுக்கு கம்பெனிக்கு எது நல்லதுன்னு படுதோ அதையே செய்ங்க என்று கூறிவிடுகிறார். அதை தொடர்ந்து அர்ஜுனும் பெங்களூருக்கு கிளம்புகிறார்.


அந்த நேரத்தில் மேக்னாவின் சோப்பு கம்பெனியில் மிகவும் நஷ்டம் அடைவதால் ஆளுக்கு ஒரு ரீசன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் விலையை குறைக்க வேண்டும் என்று மேக்னாவின் மாமா பையன் அறிவுரை கூற அதற்கு மேக்னா அது நம்முடைய தரத்தை நாமளே குறைச்சிக்கிட்ட மாதிரி போய்டும் என சொல்லி தமிழ் இடம் ஐடியா கேட்கிறார். 

அதற்கு தமிழ் லிக்விட் மாதிரி அதை மாற்றி செய்யலாம் என்று ஐடியா கொடுக்க இந்த ஐடியா புதுசா இருக்கே எப்படியாவது நம்ம இதை செயல்முறை பண்ணனும் இன்னும் ரெண்டு நாளில் அந்த லிக்விட் மார்க்கெட்டுக்கு வரணும். அதுக்கு உண்டான வேலை பாருங்க என்று மேக்னா சொல்லிவிட்டு சாப்பிட போகலாமா தமிழ் என்று கேட்க இருவரும் சாப்பிட கிளம்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது 

Advertisement

Advertisement