• Dec 25 2024

ஆண்டவரின் தந்திர செயல்... நடிப்பில் மட்டும் இல்லை அந்த வேலையிலும் படும் கெட்டிக்காரர் தான் கமல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் தொடர்ந்து பல படங்களில் படும் பிசியாக இருக்கிறார். சினிமா திரைத்துறையில் இருக்கும் அனைத்து கலைகளும் அறிந்த நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் . தமிழ் சினிமாவை தன் ஒவ்வொரு படங்களின் மூலமும் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல புது புது முயற்சிகளை தன் ஒவ்வொரு படத்திலும் கமல் கையாண்டு வருகின்றார்.

வித்யாசமான படங்களை முயற்சிக்கும் கமல் அதனை எப்போதும் தன் சொந்த பணத்தை போட்டு தான் துவங்குவார். சினிமாவின் மூலம் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவிலேயே போட்டு வருகின்றார் கமல். 


தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைப், ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 மற்றும் வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் KH233 ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் நடிப்பது மட்டுமன்றி படங்களை தயாரித்தும் வருகின்றார் கமல். அந்த வகையில் சிவகார்த்திகேயனை வைத்து SK21, சிம்புவை வைத்து STR 48 ஆகிய படங்களை மிகப்பிரமாண்டமாக தயாரித்து வருகின்றார் கமல். இதைத்தவிர தொடர்ந்து படங்களை தயாரிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளார்.


கமல் எப்படி மிகப்பிரமாண்டமான படங்களை தயாரிக்கிறார் என்பது பற்றி தகவல் தற்போது கிடைத்துள்ளது. என்னவென்றால் கமல் ஒரு படத்தை தயாரிக்கும் முன்பே அப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை விற்றுவிடுவாராம்.


உதாரணத்திற்கு சிம்பு மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தை அறிவித்துவிட்டு அப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை மிகப்பெரிய தொகைக்கு முன்னணி நிறுவனத்திடம் விற்றுவிடுவாராம். இதனாலே அவரால் படங்களை தயாரிக்கமுடிகிறது என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

Advertisement

Advertisement