• Dec 25 2024

பிரபல நடிகை வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்.. கத்தியை காட்டி மிரட்டியதால் பெரும் பரபரப்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சோனா. இவர் ஷாஜகான், குசேலன், மிருகம், ஜித்தன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் குத்தாட்ட பாடல்களால் புகழ்பெற்றவர்.

இந்த நிலையில், நடிகை சோனாவின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் இருவர் வீட்டில் காம்பவுண்ட் சுவரை ஏறி குறித்து வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயற்சித்து உள்ளார்களாம். இதன்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குறைத்துள்ளது. நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் அவரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்கள்.

அவர்களைப் பார்த்து நடிகை சோனா கூச்சலிடவே மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்கள். இதனால் சோனா தப்பி செல்ல முயன்ற போது கீழே விழுந்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.


இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரும் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்கள். அதன் பின்பு சோனா  காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கத்தியை காட்டி மிரட்டி சென்றது யார் என்பது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு பிரபல நடிகையின் வீட்டில் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement