தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக விளங்கும் வடிவேலு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தனது புதிய படம் குறித்து அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் சினிமா ரசிகர்களுக்கு அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் "இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன். ஆனால் வாய்க்குள்ள விரல்ல விட்டு ஆட்டிகிட்டு இருக்காரு. இப்படித்தான் சூட்டிங்லையும் பண்ணுவாரு. அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ் நாட்டிற்கு கிடைச்ச வரப்பிரசாதம். இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கல் ஜாக்ஷன் பிரபுதேவா " என கூறியுள்ளார்.
மற்றும் பிரபுதேவாவின் அடுத்த படத்தில் நகைச்சுவை நடிகராக வடிவேல் நடிக்கவுள்ளார். இப் படத்தின் சூட்டிங் வேலைகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருவதுடன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றும் நீண்டகால இடைவேளையின் பின் வடிவேல் காமெடியனாக நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Listen News!