• Dec 26 2024

கொலை செய்யப்பட்ட பிரபல அரசியல் வாதி! கண்டனம் தெரிவித்து பதிவு போட்ட தளபதி விஜய் !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

இன்றய தினம் இந்தியா முழுவதும் பரபரப்பாக காணப்படுவது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங்  என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதே ஆகும்.  இதனை எதிர்த்து பல சினிமா பிரபலங்களும் அரசியல் வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர் 


இந்த நிலையிலேயே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகவும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் குறித்த சம்பவத்தை எதிர்த்து தனது x தள பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார்.


அதில் " பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement