• Apr 17 2026

பிச்சையெடுத்த மனோஜை வீட்டுக்கு கூட்டிவரும் முத்து! அதிர்ச்சியின் உச்சத்தில் விஜயா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கோவில் வாசல் ஒன்றில் மனோஜ் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்க, அங்கு மீனா வருகிறார். அவரை பார்த்ததும் தலையில் துண்டைப் போட்டு மறைந்து கொள்கிறார் மனோஜ்.

இதையடுத்து மீனா அவரை எப்படியோ பார்த்து விடுகிறார் போல, அதன்பின் முத்துவுக்கு போன் பண்ணி உடனே வருமாறு அழைக்கிறார்.


அங்கு வந்த முத்து பிச்சையெடுக்கும் மனோஜை பார்த்துவிட்டு இங்க என்னடா பண்ணுறா, என அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்கிறார்.

இதை தொடர்ந்து அவர் பிச்சைக்கார வேஷத்தில் இருப்பதால் வீட்டுக்கு அவர் சென்றதும், விஜயா அவரை பார்த்துவிட்டு பிச்சைக்காரனை வீட்டுக்கு கூட்டி வந்து இருக்கான் என முத்துவுக்கு கத்துகிறார். 

அதன்பின், மனோஜ் அம்மா என கத்திக் கொண்டு உள்ளே வர, விஜயா காதை பொத்திக் கொள்கிறார்.ஆனால் மனோஜ் தனது முகத்தை திறந்து காட்ட அப்படியே அதிர்ச்சி அடைகிறார். இது  தான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement