• Dec 26 2024

பாக்கியா சொன்ன ஒரே ஒரு சொல்லால் போலீசில் சிக்கிய பழனிச்சாமி! பாக்கியலட்சுமியில் அடுத்து நிகழ்ப்போவது?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமி தனது அம்மாவிடம் பாக்கியா பிறந்த நாளைக்கு சமைத்து தந்ததற்கு பணம் கொடுத்தாச்சா என கேட்க, நான் பணம் கொடுத்தேன் ஆனா அவங்க வேண்டாம் என்று சொல்லிட்டா என சொல்லுகிறார்.

இதையடுத்து பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு சென்ற பழனி, அங்கு பாக்கியாவுக்கு பணம் கொடுக்க, என்ன சார் அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க என சொல்ல, என்ன அன்பா என வெட்கப்படுகிறார் பழனி.


அந்த லவ் மூட்லையே வண்டியை ஒட்டிக் கொண்டு வர, ரோட்டில் உள்ள ட்ராபிக்கில் நிப்பாட்டாமல் வாகனம் ஓடுகிறார்.

இதன் காரணத்தினால் ட்ராபிக் போலீசார் அவரை விரட்டி பிடித்து 500 ரூபா அபராதம் விதிக்க, போங்க சார் அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க என சொல்லி வெட்கப்படுகிறார். இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement