• Apr 19 2026

மீனா கழுத்துக்கு வந்த புது தாலி... சவாலை சர்ப்ரைஸ்- ஆக முடித்த முத்து! விஜயாவுக்கு செம்ம நோஸ் கட்.!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதன்படி, விஜயாவும் அண்ணாமலையும் பேசிக் கொண்டிருக்க, அந்த பொண்ணு கிட்ட வாங்கின நகை எல்லாம் கொடு என்று அண்ணாமலை விஜயாவுக்கு சொல்கிறார்.

அதற்கு விஜயா, என்னமோ நான் நகையெல்லாம் புடுங்கி வச்ச மாதிரி சொல்றீங்க என்ன சொல்ல, இதனைக் கேட்ட மீனா வேண்டாம் மாமா என் புருஷன் நினைச்சா எனக்கு இன்னைக்கு கூட நகை வாங்கி போடுவாரு என மீனா சொல்ல, முத்துவும் அதை கேட்கிறார்.


இதைத் தொடர்ந்து, வீட்டிற்கு வரும் முத்து வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டு, யாரோ சொன்னாங்க கார் எல்லாம் ஓட்டி நகையெல்லாம் வாங்க முடியாது என்று.. இப்ப வாங்கியாச்சு என விஜயாவை பாத்து சொல்லுகிறார்.

அதை எடுத்து வாங்கிய புது தாலியை முத்து மீனாவிடம் கொடுக்க, மீனா அதை கண்ணில் ஒத்தி வைக்கிறார். 

இதை பார்த்து விஜயா அதிர்ச்சியாக இருக்கிறார். இதுதான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ...

Advertisement

Advertisement