• Dec 25 2024

வேலை தேடி திரிந்த முத்துவுக்கு கிடைத்த ஷாக்..! மீனா குடும்பத்தை அவமானப்படுத்திய விஜயா! இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க..

அதன்படி இன்றைய எபிசோட்டில், மீனாவின் அம்மா முத்துவுக்கு மோதிரம் போட 'எனக்கு மோதிரம் வேண்டாம் போடுவதாக இருந்தால் உங்க பொண்ணுக்கு போடுங்க' என்று சொல்லி பட்டாசு வெடிக்க போலாம் என சத்யாவை கூட்டிக்கொண்டு கீழே வருகிறார் முத்து. அங்கு  'நீதான் தைரியமான ஆளாச்சே போய் தைரியமா பட்டாசு வெடி பார்க்கலாம்' என மீனாவை சீண்ட 'மீனா எனக்கு ஒன்னும் பயம் கிடையாது' என்று பட்டாசு வெடிக்கிறார்.

பட்டாசு சத்தம் கேட்டு முத்துவை கட்டிப்பிடித்துக் கொள்ள பிறகு அங்கிருந்து வந்தவர்கள் முத்துவை பாராட்டி பேசுகின்றனர் உன்னை மாதிரியே மீனாவும் உதவியும் வந்தா மறக்காம செய்வ உங்க வீட்டையே எதிர்த்து உன் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சது மீனா தானே என பேசி பழசை கிளறி விடுகின்றனர். 


அதன் பிறகு மீனா மற்றும் முத்து வீட்டுக்கு வந்திருந்த அப்பாகிட்ட கார் விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று சொல்லி முடித்து கூறுகிறார். வாக்கிங் சென்று வரும் அண்ணாமலை கார் எங்கே எனக் கேட்க முத்து அது வாப்பா பாத்துக்கலாம் என சமாளித்துவிட்டு செல்ல திரும்பத் திரும்ப அண்ணாமலை கார் பற்றிய கேட்கிறார். 

வீட்டுக்குள் வந்தது மீனா வீட்ல நாங்க ஒன்னும் போடலியா என கேட்டு அவர்கள் குடும்பத்தை அவமானப்படுத்துவது போல விஜயா பேச முத்து மனோஜ் எப்படிச்சி உனக்கு மாமியார் வீட்டில் இருந்து ஒன்னும் வரலையே என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு கார் ஓனர் ஏழு நாளைக்கு டூருக்கு போக எடுத்துட்டு போயிருக்காரு என்று சொன்னார் அப்போ அதுவரைக்கும் வருமானம் கிடையாதா? மாச கடைசி செலவு நிறைய இருக்கு பணம் எப்படி கொடுப்ப என கேட்க, ரோகிணி என்னுடைய ஷேர்  பணத்தை எடுத்து வந்து கொடுக்க முத்து பணம் கொடுக்க முடியாமல் இருக்க விஜயா ஏளனமாக பேச அண்ணாமலை கொஞ்சம் அமைதியா இரு என அடக்குகிறார். 

பிறகு மீனா ரூமுக்கு வந்தது எல்லாம் உன்னால தான் நீ பண்ண வேலையால தான் நான் இன்னைக்கு கார் கூட இல்லாமல் நடு ரோட்டில் நிற்கிறேன் என திட்டிவிட்டு வேலை தேடி வெளியே செல்கிறார். வெளியே போன இடத்தில் பைனான்சியர் எல்லாருக்கும் போன் போட்டு முத்துக்கு வேலை தரக்கூடாது என சொல்லி விட்டதாக ஒரு டிராவல்ஸ் உரிமையாளர் சொல்ல முத்து ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement