• Dec 27 2024

என்ன செருப்பால அடிக்கணும்.. பைத்தியம் என்று திட்டிய மீனாவுக்கு முத்து பதிலடி! பிளட் பிரதர்ஸ் செய்த காரியம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில்,மீனா அப்பாவின் நினைவு நாளுக்கு சென்ற முத்துவை, மீனாவின் அம்மாவும் அசிங்கப்படுத்த, சத்யாவும் அசிங்கப்படுத்துகிறார். அதற்கு கோவப்பட்ட முத்து, சத்யாவை அங்கும் வைத்து அடிக்கிறார்.

இதையடுத்து அப்பாவின் நினைவு நாளில் எல்லாரும் சாப்பிடாம இருக்க, மீனா அப்பா நாங்க சாப்பிடாம இருந்தா கஷ்டப்படுவார் என்று படையல் சாப்பாட்டை சாப்பிடுகிறார்.

அதன்பின், மீனா வீட்டிற்கு வந்து நடந்தவற்றை எல்லாம் அண்ணாமலையிடம் சொல்ல, அவர் முத்துவை திட்டுகிறார்.அதன்பின் இதையும் அப்பா கிட்ட தான் சொல்லுவியா என முத்து மீனாவை திட்டுகிறார்.இதை பார்த்து விஜயா சந்தோசப்படுகிறார்.


மறுபக்கம், ஸ்ருதி அம்மா வந்து பார்த்த விஷயத்தையும், நான்கு நாள் ட்ரிப் போக டிக்கெட் தந்த விஷயத்தையும் சொல்ல, எனக்கு வேலை போக முடியாது கஷ்டம் என ரவி சொல்கிறார். அதற்கு ஸ்ருதி எல்லாம் பிரீ தானே அப்படி என்று சொல்ல, அப்போ எனக்கு ஒன்றும் செய்ய தெரியாது என உங்க அம்மா குத்திக் காட்டுறவா என சண்டை போட்டு மொட்டை மாடிக்கு செல்கிறார்.

அங்கு முத்துவும், மனோஜும் ஏற்கனவே இருக்கிறார்கள். மூவரும் கல்யாணம் பற்றியும், சின்ன வயசு நினைவுகள் பற்றியும் பேசி விளையாடுகிறார்கள்.

இன்னொரு பக்கம் கிச்சனில் மீனா, ரோகிணி, ஸ்ருதி ஆகியோர்  புருஷன் பற்றியும் நடந்த சண்டை பற்றியும் பேசுகிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement