• Dec 26 2024

'நல்லா இருங்க வடிவேலு’- ஒரே வரியில் சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்- அடடே இது தான் காரணமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் வடிவேலு. இவர் இறுதியாக உமயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர சமீபகாலமாக அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கியும் வருகின்றார்.

அதன்படி கடந்த மாதம் 28ம் தேதி நிமோனியா பாதிப்பால் நடிகர் விஜயகாந்த் உயிரிழந்தார்.இவரது இறப்பிற்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தோடு அவருடைய சமாதிக்குச் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.


ஆனால் நடிகர் வடிவேலு மாத்திரம் விஜயகாந்த் மறைந்த பின்னரும் அஞ்சலி செலுத்தவில்லை. வடிவேலு நன்றி மறந்து இப்படி செய்யலாமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அவர்களுடன் வடிவேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வந்த நிலையில், ப்ளூ சட்டை மாறனும் ட்ரோல் செய்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், 'நல்லா இருங்க வடிவேலு’ ஒரே வரியில் சோலி முடித்துவிட்டார். 


இந்த பதிவில் கமெண்ட்ஸ் செய்து வரும் ரசிகர்கள், 'இனியாவது வடிவேலு திருந்தணும்... அவர் மதுரையின் அவமானம்..’ என்றெல்லாம் வசைபாடி வருகின்றனர். விஜயகாந்த், வடிவேலு இருவருமே மதுரைகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement