• Dec 25 2024

மகேஷ் பாபுவை 2ஆவது திருமணம் செய்த நர்மதா.. இதோ அவர் பற்றிப் பலருக்கும் தெரியாத உண்மைகள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகை நர்மதா. இவர் மகேஷ் பாபுவின் மனைவி என்பது நம் அனைவருக்கும் தெரியினும். இருப்பினும் நர்மதா பற்றி நமக்குத் தெரியாத பல விடயங்கள் உண்டு. அது குறித்து நோக்குவோம்.

நடிகை நர்மதா 1972 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பம்பாயில் பிறந்தார். இவர் ஒரு மாராஷ்திரன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் பாட்டி ஒரு மராட்டி நடிகை ஆவார். இவரது குடும்பமும் திரைப்படத் துறையை பின்னணியாக கொண்ட ஒரு குடும்பம் தான்.


நம்ரதா ஆரம்பத்தில் ஒரு மாடலாகவே இருந்தார். அதன் பின்னர் நிறைய நிகழ்ச்சிகள் மற்றும், அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கின்றார். இதன் மூலமாக நிறைய விருதுகளையும் வென்றிருக்கின்றார். 1993 இல் 'மிஸ் இந்தியா' என்ற பட்டத்தை வென்றிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து 'மிஸ் யுனிவர்ஸ்' என்ற போட்டியில் கலந்து கொண்டு 6ஆவது இடத்தைப் பிடித்திருக்கின்றார்.

அது மட்டுமல்லாது ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கின்றார். வளர்ந்ததும் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு பெரிய பெரிய நட்சத்திரங்களின் படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.


அந்தவகையில் சல்மான் கண், சுனில் குமார் போன்றவர்களின் படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 'கச்சி தாகே, வாஸ்தவ்' போன்ற படங்கள் இவருக்கான ஒரு சிறந்த அடையாளத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.

இதேபோல் 'வம்சி' என்ற தெலுங்கு படத்திலும், மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றார். இவரது கேரியரிலேயே இவர் பண்ணிய படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20க்கு குறைவாகவே இருக்கும். 


இவரது குடும்ப வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் மகேஷ்பாபுவை திருமணம் செய்வதற்கு முன்னர் ரிலேஷன்ஷிப்பில் பல கொடுமைகள் கூடி நடந்திருக்கு. அதாவது இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் தீபக் என்ற பிரபலத்துடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் பின்னர் அது செட் ஆகாமல் பிரேக்கப் பண்ணி விட்டார்கள். ஆனாலும் இவர்கள் இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் அந்தக் காலத்தில் ஒரு சில தகவல்கள் வெளியாகி இருந்தன.


பின்னர் 'வாஸ்தவ்' படத்தினுடைய இயக்குநர் கூடவும் காதலில் இருந்ததாக கூறப்படுகின்றது. மனோஜ் என்ற இந்த இயக்குநர் ஏற்கெனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதலும் இடையில் முறிவடைந்தது.

இதன் பின்னர் தெலுங்கில் 'வம்சி' என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படம் முடியும் போதே இவர்கள் இருவரும் டேட்டிங் செல்ல தொடங்கி விட்டார்கள். 2000 ஆம் ஆண்டில் ஆரம்பமான இந்தக் காதல் 2005 வரை தொடர்ந்தது. 2005 இல் இவர்களது திருமணமும் நடைபெற்றது. மேலும் நம்ரதா மகேஷ்பாபுவை விட 3வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


திருமணத்தை தொடர்ந்து நம்ரதா சினிமாவில் இருந்து விலகி விட்டார். ஆனால் மகேஷ்பாபு இன்றுவரை நடிப்பைத் தொடர்ந்து வருகின்றார். இத்தம்பதியினருக்கு கவுதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் தற்போது சந்தோசமாக தமது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement