விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டு வருபவர் தான் சிங்கப்பூர் தீபன்.அவர் குறித்து தான் பார்ப்போம் வாங்க.
சிங்கப்பூர் தீபன் வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் 1986ம் ஆண்டு நவம்பவர் மாதம் 9ம் திகதி பிறந்தவர். இவர் மிகவும் சாதாரண குடும்பத்தில் தான் பிறந்திருக்கின்றார். குடும்ப வறுமை காரணமாக தன்னுடைய 10ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போக ஆரம்பித்து விட்டாராம்.
அதனால் கிடைக்கும் வேலை எல்லாம் செய்து வந்தாராம். தொடர்ந்து மிமிக்கரி செய்யும் ஆர்வம் உடையதால் இவர் பல மேடைகளில் எல்லாம் ஹீரோக்களைப் போல குரல் மாற்றி பேசி வந்தாராம்.இவருடைய இயற்பெயர் தீபன் தானாம். ஆனால் முன்னுக்கு வரும் அடை மொழியான சிங்கப்பூர் என்பதை தன்னுடைய அடையாளத்திற்காக வைத்துக் கொண்டாராம்.
இவருடைய முதல் ரியாலிட்ரி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது ஷோ தானாம். இந்த ஷோவுக்கு வரக் காரணமே இவருடைய கடின உழைப்பு தானாம்.மிகவும் கஷ்டப்பட்டுத் தான் இந்த ஷோவுக்கு வந்தாராம்.இது தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் ஏனைய போட்டியாளர்களுடன் இணைந்து தான் காமெடி செய்து வந்தாராம்.
இந்த ஷோவைத் தொடர்ந்து செம்பருத்தி சீரியலில் வடிவேலு என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தாராம்.இதன் பின்னர் மிஸ்டர் அன்ட் மிஸ் இஸ் சின்னத்திரை ஷோவில் தனது மனைவியுடன் பங்குபற்றினாராம்.இந்த ஷோவில் இவர் பண்ணிய காமெடி இவருக்கு நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்ததாம்.
இவர் தன்னுடைய நண்பரின் காதலுக்கு உதவி செய்யப்போய் தான் தன்னுடைய மனைவியை காதலித்து வந்தாராம். இவர்களின் திருமணத்திற்கு வீட்டில் முதலில் சம்மதிக்கலையாம்.பின்னர் ஒரு மாதிரி பேசி திருமணத்தில் இணைந்து கொண்டனராம். இவர்களுக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளதாம். அதுவும் ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் தான் பிறந்துள்ளதாம்.
இதனால் இவருக்கு எப்போதும் அவருடைய பிள்ளைகள் தான் ஸ்பெஷலாம்.பிள்ளைகள் பிறந்ததற்குப் பிறகு தான் இவருக்கென்று அடையாளம் உருவாகி இருப்பதாக பல நிகழ்ச்சிகளில் இவர் தெரிவித்திருக்கின்றாராம். அத்தோடு இவருடைய கெரியரின் முன்னேற்றத்திற்கு முக்கியமானவராக இருப்பவர் வடிவேல் பாலாஜி தானாம். இவர் தான் தீபனுக்கு நிறைய உதவிகளும் செய்திருக்கின்றாராம்.
மேலும் ரியாலிட்ரி ஷோக்களைத் தவிர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றாராம். இது தவிர குக்வித் கோமாளி ஷோவிலும் தனது காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!