• Dec 27 2024

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகையர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


’நாயகி’ உள்பட ஒரு சில சீரியல்களில் வில்லனாக நடித்த தேவன் குமார் என்பவர் திடீரென காலமானதை எடுத்து சின்னத்திரை நடிகர், நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான ’நாயகி’ என்ற சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த சீரியலில் வில்லனாக நடித்த தேவன் குமார் என்பவர் திடீரென நேற்று காலமானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

’நாயகி’ சீரியல் மட்டுமின்றி இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகிய படங்களிலும் குணசித்திர வேடங்களில் தேவன் குமார்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த தேவன் குமார், சிகிச்சையின் பலனின்றி நேற்று அவர் காலமானார். அவருடைய மறைவுக்கு சின்னத்திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சீரியல்களில் நடிப்பது மட்டுமின்றி இவர் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் பின்னணி குரல் கொடுத்தவர் என்பதும் குறிப்பாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் சண்டை காட்சிகளில் பின்னர் பின்னணி குரல் கொடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் தான் தேவன் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவன் குமார் மறைவுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையுலக பிரபலங்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement