• Apr 22 2025

நயன்தாராவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை...! இயக்குநர் சுந்தர்.C ஓபன்டாக்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் சுந்தர்.C, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு நடிகை நயன்தாரா குறித்து பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தங்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக பரவியிருந்த தகவல்களை முற்றிலும் மறுத்துப் பல உண்மைத் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இந்த நேர்காணலில் சுந்தர்.C கூறியதாவது, “நயன்தாரா எனக்கு நல்ல நண்பர். அவருடன் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. சிலர் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.” என்று கூறியிருந்தார்.


இந்தக் கருத்து அவரது ரசிகர்களையும் சினிமா வட்டாரத்தையும் மிகவும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏனென்றால், கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் நயன்தாரா – சுந்தர்.C இடையே மோதல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தன. அதற்குப் பதிலளிக்கும் வகையிலே இந்த நேர்காணல் அமைந்திருந்தது.

இதே நேர்காணலில் மூக்குத்தி அம்மன் 2 குறித்தும் சுந்தர்.C உற்சாகமாகப் பேசியுள்ளார். “இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மிகவும் திருப்தியான அனுபவமாக இருந்தது. ரசிகர்களுக்கு விருப்பமான ஒரு படம் உருவாகிறது.” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement