• Dec 27 2024

7 வருஷத்துக்கு பிறகு அது மீண்டும் நடக்குது.. ‘வாணி ராணி’ நீலிமா இசை வெளியிட்ட வீடியோ..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

’வாணி ராணி’ உள்பட பல சீரியல்களில் நடித்த நடிகை நீலிமா இசை 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் ’வாணி ராணி’ டிம்பிள் வீட்டுக்கு செல்வதாக வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த ’வாணி ராணி’ என்ற சீரியல் சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பானது என்பதும் இந்த சீரியலில் டிம்பிள் என்ற கேரக்டரில் நடித்த நீலிமா இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்தது.

இந்த சீரியலுக்கு பிறகு நீலிமா இசைக்கு பல சீரியல் வாய்ப்புகளும் ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் அவர் சீரியலில் இருந்து விலகி தற்போது பிசினஸில் பிஸியாக இருக்கிறார் என்பதும் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’வானத்தைப்போல’ சீரியலில் அவர் மீண்டும் டிம்பிள் கேரக்டரில் ரீஎண்ட்ரி ஆகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் ’வாணி ராணி’ படப்பிடிப்பு நடந்த அதே வீட்டில் தற்போது ’வானத்தைப்போல’ தொடரின்  படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் அந்த வீட்டை வீடியோ எடுத்த நீலிமா இசை, 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் அதே வீட்டிற்கு வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் இந்த வீட்டை பார்க்கும் போது தனக்கு பல்வேறு விதமான ஞாபகங்கள் வருகிறது என்றும் இந்த வீட்டை என்னால் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

’வாணி ராணி’ சீரியலில் என்னுடைய முதல் ஷாட் இந்த வீட்டில் தான் படமாக்கப்பட்டது என்றும் இந்த வீட்டில் தான் என்னை பெண் பார்க்கும் நிகழ்ச்சியின் காட்சி படமாக்கப்பட்டது என்றும் அதை என்னால் இப்போது கூட நினைத்து பார்க்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வீட்டிற்கு  மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement