• Dec 26 2024

அந்த மலமாட காசுக்கா கல்யாணம் பண்ண போறியா? வரலட்சுமியை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடிகர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார்.

இது தொடர்ந்து தனக்கேற்ற நல்ல கதாபாத்திரங்களையும், திரைக் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பில் சரத்குமாரையே மிஞ்சி பட்டையை கிளப்பி வருகிறார்.

நடிகை வரலட்சுமி நடித்த படங்களில் போடா போடி, மத கத ராஜா, வர்க்கம், கொன்றால் பாவம், பொய்க்கால் குதிரை, காட்டேரி, யசோதா, சர்க்கார், மாரி 2, சண்டைக்கோழி 2, விக்ரம் வேதா, தாரை தப்பட்டை, வெல்வட் நகரம் ஆகியவற்றுடன் இவர் இறுதியாக நடித்த ஹனுமான் திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளன.


கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் நடிகை வரலட்சுமிக்கும் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த மலமாட காசுக்காக கல்யாணம் பண்ண போறியா? என பலரும் வரலட்சுமிக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.


அதாவது, இவரின் வருங்கால கணவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனதோடு, அவருக்கு 11 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். ஆனாலும் இதனை பொருட்படுத்தாமல் நடிகை வரலட்சுமி அவரை திருமணம் செய்யவுள்ளார்.

எனினும், நிக்கோலாய் சச்தேவை காசுக்காக தான் கல்யாணம் செய்ய போறியா என அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement